மகாராணியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

பிரித்தானிய மகாராணியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் இறுதி அஞ்சலி

by Staff Writer 18-09-2022 | 10:32 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் மறைந்த இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் பூதவுடலுக்கு இன்று(18) இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இரண்டாவது எலிசபெத் மகாராணியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் கூடியிருந்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் இலங்கை நேரப்படி இன்று(18) இரவு 7.30 - 7.45 இற்கும் இடைப்பட்ட நேரத்தில் மகாராணியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேனவும் இதன்போது பிரசன்னமாகியிருந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மறைந்த இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகள் நாளை(19) வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நடைபெறவுள்ளன.