.webp)
Colombo (News 1st) திருகோணமலை - திருக்கடலூர் கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இன்று(18) முற்பகல் 10.30 மணியளவில் கடலுக்கு நீராடச் சென்ற போதே, நீரில் மூழ்கி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கடலூர் பகுதியை சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
திருகோணமலை தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.