5 பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் பதில் அமைச்சர்களிடம் ஒப்படைப்பு

by Staff Writer 18-09-2022 | 6:24 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் காணப்படும் அமைச்சுகளின் கடமைகள், பதில் அமைச்சர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ள காலப்பகுதியில், கடமைகளை முன்னெடுப்பதற்காக இந்த பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார தென்னக்கோன், பதில் நிதி அமைச்சராக ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய, மகளிர் மற்றும் சிறுவர் விவகார பதில் அமைச்சராக கீதா குமாரசிங்க, பதில் தொழில்நுட்ப அமைச்சராக கனக ஹேரத் மற்றும் பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக திலும் அமுனுகம ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.