.webp)
Colombo (News 1st) கரையோர மாரக்கத்திலான ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ரயிலொன்று தடம்புரண்ட காரணத்தினால் ஏற்பட்ட சேதத்தினால் கடந்த 3 தினங்களாக ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக, தற்போது 2 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
சேதமடைந்த ரயில் மார்க்கத்தை புனரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.