நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

by Staff Writer 18-09-2022 | 7:30 PM

Colombo (News 1st) ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி, 5 கோடி ரூபாவிற்கும் அதிக நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் நேற்று(17) கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த பெண் எத்துகால பகுதியில் போது, கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

46 வயதான இரு பிள்ளைகளின் தாயொருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். 

நபர் ஒருவரிடமிருந்து 50 முதல் 70 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் குறித்த பெண்ணால் தற்போது பாதிக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேகநபர் நாட்டின் பல பகுதிகளிலும் வாடகைக்கு எடுத்த வீடுகளிலிருந்து இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட குறித்த பெண்  நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.