தசுன் ஷானக்க போல் முயன்றால் நாட்டைக் கட்டியெழுப்பலாம்: ஜனாதிபதி கருத்து

by Bella Dalima 17-09-2022 | 8:28 PM

Colombo (News 1st) வீழ்ந்துள்ள நாட்டை கட்டியெழுப்புவதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்கவின் முயற்சி சிறந்த உதாரணம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

விளையாட்டு வீர, வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ஆசிய  கிரிக்கெட் மற்றும் வலைப்பாந்தாட்ட சாம்பியன்கள் மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் திறமையை வௌிப்படுத்திய வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (16) நடைபெற்றது.

இதன்போது, ஆசிய வலைப்பந்தாட்ட தேசிய அணியின் அனைத்து வீராங்கனைகளுக்கும் 2 மில்லியன் ரூபா வீதம்  வழங்குவதற்கு  இலங்கை கிரிககெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.

பொதுநலவாய விளையாட்டு விழாவில் வௌ்ளிப்பதக்கங்களை பெற்றுக்கொண்டவர்களுக்கு 10 மில்லியன் ரூபாவும் வெண்கலப்பதக்கம் பெற்றவர்களுக்கு 5 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அபேக்ஷா வைத்தியசாலைக்கு  அன்பளிப்பு செய்யும் 5 இலட்சம் அமெரிக்க டொலர்  நிதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.