.webp)
Colombo (News 1st) பெரும்போகத்தில் சேதன பசளையை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபா உர மானியம் வழங்கப்படவுள்ளது.
இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் 16,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 /23 ஆம் ஆண்டிற்கான பெரும்போகத்தில் 30% சேதன உரத்தையும் 70% இரசாயன உரத்தையும் பயன்படுத்தி நெற்செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பெரும்போகத்தில் இரசாயன உரம் மூலம் விவசாயம் மேற்கொள்வோருக்கு ஏக்கருக்கு 50 கிலோகிராம் யூரியாவை 10,000 ரூபாவிற்கு வழங்க ஜனாதிபதி அனுமதியளித்துள்ளார்.