USAID மூலம் இலங்கைக்கு 65 Mn டொலர் நிதியுதவி

USAID நிறுவனம் மூலம் இலங்கைக்கு 65 மில்லியன் டொலர் நிதியுதவி

by Bella Dalima 16-09-2022 | 10:24 PM

Colombo (News 1st) USAID  எனப்படும்  சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் ஊடாக இலங்கைக்கு  5 வருட காலத்தில் மேலும் 65 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung இன்று தெரிவித்தார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட USAID நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவரின் விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நிதியுதவி கிடைக்கவுள்ளது.

அதற்கான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.