பெரும்பான்மையினரின் ஆதரவு இருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 16-09-2022 | 7:50 PM

Colombo (News 1st) நாட்டின் பிரச்சினைகளை நிவர்த்திக்க பெரும்பான்மையினரின் ஆதரவு தனக்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

அவுஸ்திரேலியாவின் ABC தொலைக்காட்சியின் Foreign Correspondent நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். 

ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வதன் மூலம் இலங்கையின் பிரச்சினையை தீர்க்க முடியுமா என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த அவர்,

அரச சொத்துகளுக்கு  தீ வைப்பதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.  இதனை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.  ஜனாதிபதி மாளிகையையும் எனது வீட்டையும் பிரதமர் அலுவலகத்தையும்  பாராளுமன்றத்தையும் கைப்பற்றுவதன் மூலம் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்களா?

என கேள்வி எழுப்பியுள்ளார். 

சட்டத்தை மீறியோரை மாத்திரமே  கைது செய்வதாகவும் நாட்டின் சட்டத்தின் படியே பொலிஸார் செயற்படுவதாகவும் அனைத்து விடயங்களும் சட்டபூர்வமாகவே இடம்பெறுவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.