.webp)

Colombo (News 1st) சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள 42 மாடி கட்டடத்தில் இன்று (16) தீ பரவியது.
ஒரு தளத்தில் பற்றிய தீ, மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியுள்ளது.
கட்டடத்தில் இருந்தவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறி, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் இருந்து விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை எழுந்ததால் தீயணைப்பு வீரர்களால் கட்டடத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
715 அடி உயரம் உள்ள அந்த கட்டடம் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.
சீன அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான China Telecom அலுவலகம் குறித்த கட்டடத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
