.webp)
Colombo (News 1st) சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர், 2022 லேவர் கோப்பை தொடருக்குப் பின் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்க ஓபன் போட்டிகளில் விளையாடியுள்ள பெடரர், இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று (15) தனது ஓய்வு முடிவினை அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.