.webp)
Colombo (News 1st) அடக்குமுறைகளை நிறுத்துமாறு வலியுறுத்தி இன்று (16) மாலை கொழும்பு ஹைட் பார்க்கில் ஒன்றிணைந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பல்வேறுபட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, முன்னிலை சோசலிசக் கட்சியின் புபுது ஜயகொட மற்றும் வசந்த யாப்பா பண்டார , ஶ்ரீநாத் பெரேரா உள்ளிட்டவர்களும் பேரணியில் பங்கேற்றிருந்தனர்.
பேரணி ஆரம்பமாவதற்கு முன்னர் பெருமளவிலான பொலிஸ் அதிகாரிகள் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.