.webp)
Colombo (News 1st) நியூஸ்ஃபெஸ்ட் மற்றும் NDB ஒன்றிணைந்து மூன்றாவது தடவையாக நடத்தும் ஶ்ரீலங்கா வனிதாபிமான 2022-க்கான அங்குரார்ப்பண ஊடக சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெற்றது.
'நாட்டை கட்டியெழுப்பும் மகளிரை வலுப்படுத்துவோம்' என்ற தொனிப்பொருளில் நாட்டின் பெண்களின் திறமைகளுக்கு மதிப்பளிப்பதற்காக இந்த போட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வெற்றிகரமாக நிறைவுபெற்ற வனிதாபிமான போட்டி நிகழ்சி மூன்றாவது தடவையாகவும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான போட்டிக்காக 8 பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.
இதற்கான ஒப்பந்தம் இன்று பிற்பகல் கைச்சாத்திடப்பட்டது.
நிகழ்வில் NDB வங்கி சார்பில் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான திமந்த செனவிரத்ன உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் மனித வளப் பிரிவு குழுமப் பணிப்பாளர் சுரங்க ஜயலத், நிறைவேற்று குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஶ்ரீலங்கா வனிதாபிமான மாகாண போட்டிகளுக்கான நடுவர் குழாமின் தலைவராக செயற்படவுள்ள மனித வலு மற்றும் தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல பெர்னாண்டோவும் நிகழ்விற்கு வருகை தந்திருந்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் H.D.கருணாரத்ன ஶ்ரீலங்கா வனிதாபிமான நிறுவனங்கள் மற்றும் தொழில் பிரிவு போட்டிக்கான நடுவர் குழுவின் தலைவராக செயற்படவுள்ளார்.
மாகாண போட்டிகளுக்கான விண்ணப்பம் சேகரிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகின்றது.
விண்ணப்பப்படிவத்தை நியூஸ்ஃபெஸ்ட் இணையத்தளத்தில் இருந்தும் நாடளாவிய ரீதியில் உள்ள NDB வங்கி கிளைகளிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.