.webp)
Paris: மின்சாரத்தை சேமிக்கும் பொருட்டு ஈபெல் (Eiffel Tower) கோபுரத்தின் மின் விளக்குகள் முன்கூட்டியே அணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபெல் கோபுரம் ஒவ்வொரு நாளும் இரவு வேளைகளில் மின் ஔியில் ஜொலிப்பது வழமை.
கோபுரம் கிட்டத்தட்ட 20,000 மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நள்ளிரவு 1 மணி வரை ஔிர்கிறது. அதன் பின்னரே மின் விளக்குகள் அணைக்கப்படும்.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்தி வைத்துள்ளதால், பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்டு மின்சாரத்தை சேமிக்கும் விதமாக ஈபெல் கோபுரத்தின் மின் விளக்குகளை முன்கூட்டியே அணைக்க பாரிஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், உள்ளூர் நேரப்படி இரவு 11:45 மணிக்கே ஈபெல் கோபுரத்தின் மின் விளக்குகள் அணைக்கப்படும் என நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.
பாரிஸில் உள்ள பொதுக் கட்டடங்களிலும் இரவு 10 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.