ICC முன்னாள் நடுவர் அசாத் ரவூப் காலமானார்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முன்னாள் நடுவர் அசாத் ரவூப் காலமானார்

by Bella Dalima 15-09-2022 | 4:34 PM

Colombo (News 1st) பாகிஸ்தானின் முன்னாள் நடுவரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடுவர் குழாத்தின் முன்னாள் உறுப்பினருமான அசாத் ரவூப் (Asad Rauf) தனது 66 ஆவது வயதில் காலமானார்.

 2000 ஆம் ஆண்டில் தனது முதல் ஒருநாள் போட்டியிலும், 2005 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியிலும் ரவூப் நடுவராக செயற்பட்டார். 

2006 ஆம் ஆண்டில், ICC-இன் நடுவர் குழாத்திற்கு அவர் பெயரிடப்பட்டதுடன், 2013 வரை அங்கம் வகித்தார்.

அவர் 64 டெஸ்ட் போட்டிகள், 139 ODI-கள், 28 T20I-கள் மற்றும் 11 மகளிருக்கான T20I போட்டிகளில் நடுவராக அல்லது TV நடுவராக பணியாற்றினார்.

2013 ஆம் ஆண்டில் IPL கிரிக்கெட் தொடரில் இவர் மீது ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன், 2016 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால்  அசாத் ரவூபிற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டில் 5 வருட தடை விதிக்கப்பட்டது.