பாடசாலைகளுக்கு இடையிலான கபடி போட்டி: யாழ்.கலட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை சம்பியனானது

பாடசாலைகளுக்கு இடையிலான கபடி போட்டி: யாழ்.கலட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை சம்பியனானது

பாடசாலைகளுக்கு இடையிலான கபடி போட்டி: யாழ்.கலட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை சம்பியனானது

எழுத்தாளர் Staff Writer

15 Sep, 2022 | 10:01 am

Colombo (News 1st) 17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கபடிப் போட்டியில் யாழ்ப்பாணம் – கலட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை சம்பியனாகியுள்ளது.

பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட கபடிப் போட்டி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் மூன்றாவது நாளாகவும் நேற்று(14) நடைபெற்றது.

17 வயதிற்குட்பட்ட வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கபடிப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று(15) நடைபெற்றது.

யாழ்.தும்பளை சிவப்பிரகாசம் மகா வித்தியாலயம், யாழ்.கலட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் மோதியிருந்தன.

50 க்கு 32 என்ற புள்ளிக்கணக்கில் யாழ்.கலட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணி மாகாண சம்பியனாகியது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்