English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
15 Sep, 2022 | 4:34 pm
Colombo (News 1st) பாகிஸ்தானின் முன்னாள் நடுவரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடுவர் குழாத்தின் முன்னாள் உறுப்பினருமான அசாத் ரவூப் (Asad Rauf) தனது 66 ஆவது வயதில் காலமானார்.
2000 ஆம் ஆண்டில் தனது முதல் ஒருநாள் போட்டியிலும், 2005 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியிலும் ரவூப் நடுவராக செயற்பட்டார்.
2006 ஆம் ஆண்டில், ICC-இன் நடுவர் குழாத்திற்கு அவர் பெயரிடப்பட்டதுடன், 2013 வரை அங்கம் வகித்தார்.
அவர் 64 டெஸ்ட் போட்டிகள், 139 ODI-கள், 28 T20I-கள் மற்றும் 11 மகளிருக்கான T20I போட்டிகளில் நடுவராக அல்லது TV நடுவராக பணியாற்றினார்.
2013 ஆம் ஆண்டில் IPL கிரிக்கெட் தொடரில் இவர் மீது ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன், 2016 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் அசாத் ரவூபிற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டில் 5 வருட தடை விதிக்கப்பட்டது.
30 May, 2023 | 05:30 PM
27 May, 2023 | 04:49 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS