.webp)
Colombo (News 1st) மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுநரான மஹேல ஜயவர்தன, அந்த அணியின் செயற்திறன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அணியை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்லும் வகையில், மஹேல ஜயவர்தனவிற்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அணியின் வருமானத்தை திட்டமிடல், ஒன்றிணைந்த செயற்றிறன் கட்டமைப்பை தயாரித்தல், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுதல் உள்ளிட்ட பல விடயங்கள் மஹேலே ஜயவர்தனவின் புதிய பதவியின் கீழ் காணப்படும் பொறுப்புகளாகும்.