ஐக்கிய அரபு இராச்சியத்தில் நசீர் அஹமட்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நசீர் அஹமட்; வௌிவிவகார அமைச்சரை சந்தித்து ஜனாதிபதியின் கடிதத்தை கையளித்தார்

by Staff Writer 14-09-2022 | 5:22 PM

Colombo (News 1st) ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள அமைச்சர் நசீர் அஹமட், அந்நாட்டு வௌிவிவகார அமைச்சரிடம் கடிதத்தைக் கையளித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிவிவகார மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் அப்துல் பின் ஷெய்யத் அல் நஹ்யானை, அபுதாபியில் சந்தித்த அமைச்சர் நசீர் அஹமட் குறித்த கடிதத்தை கையளித்துள்ளார்.

இரு நாடுகளினதும் உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாக, அமைச்சர் நசீர் அஹமட் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்பை பலப்படுத்துவது தொடர்பிலும் அந்நாட்டு வௌிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பினூடாக இலங்கைக்கு சாதகமான உதவிகள் கிடைக்கும் என நம்புவதாக அமைச்சர் நசீர் அஹமட் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.