ட்விட்டர் தளத்தில் பெயர்களை மாற்றிய த்ரிஷா, விக்ரம்

ட்விட்டர் தளத்தில் பெயர்களை மாற்றிய த்ரிஷா, விக்ரம்

ட்விட்டர் தளத்தில் பெயர்களை மாற்றிய த்ரிஷா, விக்ரம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

14 Sep, 2022 | 11:33 am

Colombo (News 1st) நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் விக்ரம் ஆகியோர் ட்விட்டர் தளங்களில் தமது பெயர்களை தற்காலிகமாக மாற்றியுள்ளனர்.  

த்ரிஷா 'குந்தவை' எனவும் விக்ரம் 'ஆதித்ய கரிகாலன்' எனவும் தமது ​பெயர்களை மாற்றம் செய்துள்ளனர். 

மணிரத்னம் இயக்கத்தில் வௌியாகவுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் கதாபாத்திர பெயர்களான   'குந்தவை' மற்றும் 'ஆதித்ய கரிகாலன்' ஆகிய பெயர்களே இவர்கள் இருவரும் மாற்றியுள்ளனர். 

அதிகளவில் எதிர்பார்க்கப்படுகின்ற 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான பிராகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பாரத்தீபன், மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்துள்ளனர். 

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியிருக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் எதிர்வரும் 30ஆம் திகதி திரையரங்குகளில் வௌியாகவிருக்கின்றது. 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்