500 லிட்டர் மண்ணெண்ணெயுடன் பொலிஸாரிடம் சிக்கிய இருவர்

by Staff Writer 13-09-2022 | 12:59 PM

Colombo (News 1st) திருகோணமலை - கிண்ணியாவில் அனுமதியின்றி மண்ணெண்ணெய் கொண்டுசென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனையிலிருந்து கிண்ணியா நோக்கி அனுமதியின்றி லொறியொன்றில் மண்ணெண்ணெய் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் நேற்று முன்தினம்(11) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிண்ணியா - உப்பாறு பகுதியில் பொலிஸாரின் சோதனைச் சாவடியில் குறித்த வாகனத்தை சோதனைக்குட்படுத்திய போதே மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது 500 லிட்டர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று(12) ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.