வெவ்வேறு பகுதிகளில் வாகன விபத்துகளில் எழுவர் பலி

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் எழுவர் பலி

by Staff Writer 13-09-2022 | 3:29 PM

Colombo (News 1st) நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

புறக்கோட்டை, மிரிஹான, வென்னப்புவ, வவுணதீவு, கொக்கரெல்ல, மின்னேரியா மற்றும் சீகிரியா ஆகிய பகுதிகளில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புறக்கோட்டை  கோல் சென்டர் பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளுடன் மோதி முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 77 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மிரிஹான தெல்கந்த முச்சந்தியில் காரொன்றுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது ஆளடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

வென்னப்புவ பகுதியிலும் காருடன் மோதி 59 வயதான பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரின் சாரதி தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு, வவுணதீவு - குறிஞ்சாமுனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 88 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மின்னேரியாவில் மோட்டார் சைக்கிளும் வேன் மோதி இடம்பெற்ற விபத்தில் 38 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சீகிரியா - இனாமலுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 33 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.