.webp)
Colombo (News 1st) பலப்பிட்டியவிலும் வவுனியாவிலும் ரயில்களில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர்.
பலப்பிட்டிய - வெனமுல்ல பகுதியில் கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் வேன் மோதி இடம்பெற்ற விபத்தில் 63 வயதான வேனின் சாரதி உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, வவுனியா - தாண்டிக்குளத்தில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியா - ஈஸ்வரிபுரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான, 44 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, காலி - மக்குளுவ பகுதியில் ரஜரட்ட ரெஜின ரயிலுடன் வேன் மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ரயிலுடன் மோதிய வேன், மோட்டார் சைக்கிளொன்றுடனும் மோதியுள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்துள்ளதுடன், அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.