.webp)
Colombo (News 1st) நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்கையில், அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீளாய்வு செய்வதற்கு நேற்றைய அமைச்சரவையின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரச உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளமையால், அனுமதி வழங்கப்பட்ட பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான தீர்மானத்தினால் அடிக்கடி அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையால், சில சேவைகளுக்கு அதிகமாக ஊழியர்கள் காணப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இதனை மீளாய்வு செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.