.webp)

Colombo (News 1st) அக்குரஸ்ஸ - மாதொல பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
காணிப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே மூத்த சகோதரரால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 47 வயதான அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
