மகாராணியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி

இரண்டாம் எலிச​பெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி ரணில்

by Staff Writer 11-09-2022 | 2:48 PM

Colombo (News 1st) இரண்டாம் எலிச​பெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மறைந்த எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு Westminster Abbey இல் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இறுதி நிகழ்வில் அரச குடும்பத்தினர், பிரித்தானிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.