.webp)
Colombo (News 1st) 2022 ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி இன்று தகுதி பெற்றது.
ஹாங்காங் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 67- 43 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் முதல் காலிறுதி போட்டியில் முன்னிலையில் இருந்த இலங்கை வீரர்கள், நான்கு காலிறுதி போட்டிகளிலும் வெற்றி பெற்றனர்.
முந்தைய போட்டிகளில் 17- 7, 32 - 16, 47- 25 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டி நாளை (11) சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2023 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள உலக குலானா வலைப்பந்தாட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.