.webp)
Colombo (News 1st) ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்காக அறிவிக்கப்பட்டிருந்த கால எல்லை தற்போது 30 நாட்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கு 14 நாட்கள் மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது.
உதாரணத்திற்கு, அடுத்த மாதம் 13 ஆம் திகதி பயணிக்கவுள்ள ரயில்களுக்கான ஆசனங்களை இம்மாதம் 13 ஆம் திகதி காலை 10 மணி முதல் முன்பதிவு செய்ய முடியும்.