.webp)
Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரி காங்கேசன்துறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையான ஊர்தி வழிப் போராட்டம் இன்று (10) ஆரம்பமானது.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி வழிப் போராட்டம் 25 மாவட்டங்களுக்கும் பயணித்து இறுதியில் ஹம்பாந்தோட்டையை சென்றடையவுள்ளது.
இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையயெழுத்து திரட்டப்படவுள்ளது.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் போராட்ட செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
ஊர்தி வழிப் போராட்டம் மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் ஏனைய மாவட்டங்களுக்கு செல்லவுள்ளது.
சர்வஜன நீதி அமைப்பு , இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி தொழிற்சங்கம், வெகுஜன அமைப்புகளின் கூட்டமைப்பினர் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுக்கின்றனர்.