ICC T20I போட்டிகள்: புதிய தரவரிசை வௌியீடு

ICC T20I போட்டிகள்: புதிய தரவரிசை வௌியீடு

by Bella Dalima 07-09-2022 | 6:48 PM

Colombo (News 1st) சர்வதேச கிரிக்கெட் பேரவையின்  T20I போட்டிகளுக்கான  துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை  வௌியிடப்பட்டுள்ளது.

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் மொஹம்மட் ரிஸ்வான் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முதல் இடத்தில் இருந்த பாபர் அசாம் இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஷங்க 8 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பந்து வீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் அவுஸ்திரேலியாவின் ஜோஸ் ஹசில்வுட் முதல் இடத்தில் உள்ளார். 

தென்னாபிரிக்காவின் Tabraiz Shamsi இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் மகேஸ் தீக்சன 8 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், வனிந்து ஹசரங்க 9 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.