.webp)
Colombo (News 1st) பிரபல நடிகை தமித்தா அபேரத்ன பத்தரமுல்லையில் உள்ள தியத்த உயனவிற்கு அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்குள் முறையற்ற வகையில் பிரவேசித்தமை மற்றும் சட்டவிரோத ஒன்றுகூடல்களில் பங்கேற்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் தமித்தா அபேரத்னவை கைது செய்துள்ளனர்.