இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

ஆசிய கிண்ணத்தின் சுப்பர் 4 சுற்றில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

by Staff Writer 07-09-2022 | 7:18 AM

Colombo (News 1st) ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான பொன்னான வாய்ப்பு இலங்கை அணிக்கு உருவாகியுள்ளது.

நேற்றைய(06) போட்டியில் தோல்வியடைந்த நடப்பு சம்பியனான இந்தியா தொடரிலிருந்து வெளியேறியது.

சுப்பர் 4 சுற்றில் இரண்டு வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள இலங்கை அணி முன்னிலையில் நீடிக்கிறது.