புசல்லாவயில் கோடரியால் தாக்கி ஒருவர் கொலை

புசல்லாவயில் கோடரியால் தாக்கி ஒருவர் கொலை

by Staff Writer 06-09-2022 | 10:01 AM

Colombo (News 1st) புசல்லாவ - இஹலகம பிரதேசத்தில் கோடரியால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வாய்த்தர்க்கம் வலுப்பெற்றமையே கொலைக்கான காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் மனைவியின் தந்தையே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் 44 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, கஹட்டகஸ்திகிலியவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் கொலை செய்யப்பட்டு விவசாய கிணறொன்றுக்குள் வீசப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.