.webp)
Colombo (News 1st) வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையை அதிலிருந்து மீட்டெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது வருட பூர்த்தி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது வருடப்பூர்த்தி விழா இன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.
'ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளில் கட்சியின் வருடப்பூர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.