.webp)

Colombo (News 1st) இன்று(05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 113 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 4,551 ரூபா என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
05 கிலோகிராம் சிலிண்டரின் விலை 45 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 1,827 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
2.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றின் விலை 21 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 848 ரூபா என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
