குமார வெல்கம தலைமையில் புதிய அரசியல் கட்சி

குமார வெல்கம தலைமையில் புதிய அரசியல் கட்சி

by Staff Writer 05-09-2022 | 3:02 PM

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் கட்சித் தலைமையகம் பத்தரமுல்லையில் இன்று(05) திறந்துவைக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இன்றைய நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.