.webp)
Colombo (News 1st) பலாங்கொடை - ஹட்டன் பிரதான வீதியின் பின்னவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று(04) அதிகாலை 1.45 மணியளவில் பலாங்கொடையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞர் காயமடைந்ததுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 31 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் முச்சகர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதுடன் பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.