மரணத்தில் முடிந்த Selfie

மரணத்தில் முடிந்த Selfie

by Staff Writer 04-09-2022 | 2:47 PM

Colombo (News 1st) பண்டாரவளை ஹல்துமுல்ல - சன்வௌி தோட்டத்திலுள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்ஃபி(Selfie) எடுக்கச்சென்ற இளைஞர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

வெலமிட்டியாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்த இளைஞர் நேற்று(02) மாலை வேளையில் நீர்வீழ்ச்சியை பார்வையிடுதவதற்காக நண்பர்கள் இருவருடன்  சென்றிருந்த நிலையில், Selfie எடுப்பதற்கு முற்பட்ட வேளையில் நீர்வீழ்ச்சியிலேயே தவறி வீழ்ந்துள்ளார். 

இவர்களில் ஒருவர், Selfie எடுப்பதற்கு முற்பட்ட வேளையில் கால் வழுக்கி நீர்வீழ்ச்சியிலேயே வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து, பிரதேச மக்களும் பொலிஸாரும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், சம்பவ இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் பள்ளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.