.webp)
Colombo (News 1st) சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை 100 ரூபாவிற்கும் 200 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளை(05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு முன்னெடுக்கப்படுமென நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது புதிய விலையை அறிவிப்பதற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.