.webp)
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - தொண்டைமானாறு ஆற்றில் முதலைகள் அவதானிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவதானமாக நீராடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி இடம்பெற்றுவரும் நிலையில், நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து அதிகளவான பக்தர்கள் தினமும் ஆலயத்திற்கு வருகைதருகின்றனர்.
இந்த நிலையில், தொண்டைமானாறு ஆற்றில் முதலைகள் அவதானிக்கப்பட்டுள்ளமையினால் ஆற்றில் அவதானமாக நீராடுமாறும் ஆற்றில் போடப்பட்டுள்ள மிதப்பு எல்லைகளுக்கு உள்ளே நின்று நீராடுமாறும் ஆலய நிர்வாகத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.