'கோட்டாபயவிற்கு தேவையான வசதிகளை வழங்க தீர்மானம்'

முன்னாள் ஜனாதிபதிக்கான சிறப்புரிமைகளின் கீழ் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தேவையான வசதிகளை வழங்க தீர்மானம் - ஜனாதிபதி செயலாளர்

by Staff Writer 03-09-2022 | 3:38 PM

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளின் கீழ் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தேவையான வசதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றிரவு(02) நாடு திரும்பினார்.

சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தின் மூலம் நேற்றிரவு(02) 11.30 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.