.webp)

Colombo (News 1st) மின்சாரம் உள்ளிட்ட சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இன்று(03) முதல் அமுலாகும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய மின்சாரம், பெட்ரோலிய உற்பத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதாரம் ஆகிய சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
