எல்ல ஒடிசி ரயில் சேவை அதிகரிப்பு

எல்ல ஒடிசி ரயில் சேவை அதிகரிப்பு

by Staff Writer 03-09-2022 | 3:27 PM

Colombo (News 1st) எல்ல ஒடிசி ரயிலின் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்போதைய சேவைக்கு மேலதிகமாக எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் பிரதி வியாழக்கிழமைகளில் கொழும்பு தொடக்கம் பதுளை வரையிலும் பிரதி வௌ்ளிக்கிழமைகளில் பதுளை தொடக்கம் கொழும்பு வரையிலும் ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

ரயில் சேவை முன்னெடுக்கப்படும் தினத்திலிருந்து 14 நாட்களுக்கு முன்னர் ஆசனங்களை முற்பதிவு செய்து கொள்ள முடியுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரமே எல்ல ஒடிசி ரயில் சேவை முன்னெடுக்கப்படுகின்றது.