இலங்கையின் கடன் சுமை தொடர்பான சீனாவின் அறிவிப்பு

இலங்கையின் கடன் சுமையை குறைக்க சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற தயார் - சீனா

by Staff Writer 03-09-2022 | 3:07 PM

Colombo (News 1st) இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி மற்றும் கடன் நிவாரணம் ஆகியவற்றில் தொடர்ந்தும் சாதகமான பங்களிப்பை வழங்குவதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவும் தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது.

ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு சீன வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.