லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளது

லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளது

by Bella Dalima 02-09-2022 | 4:46 PM

Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமை (5) நள்ளிரவு முதல்  லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட  விலை சூத்திரத்திற்கு அமைய, உலக சந்தையில் சமைல் எரிவாயுவின் விலை குறைவடைந்துள்ளதால் இலங்கையிலும் விலையில் திருத்தங்களை மேற்கொள்ள எண்ணியுள்ளதாக  முதித்த பீரிஸ் குறிப்பிட்டார்.