.webp)
Colombo (News 1st) கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை (03) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் (04) அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக, தெஹிவளை - கல்கிசை, கோட்டை மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம - பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்போது, இரத்மலானை, கட்டுபெத்த பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.