.webp)
Colombo (News 1st) மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுடன் 'கம்மெத்த' செல்லக்கதிர்காமத்திற்கு சென்றது.
செல்லக்கதிர்காமம் - கொஹொம திகானே கிராம மக்கள் எதிர்கொண்ட பிரதான பிரச்சினைக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது.
அவர்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
கொஹொம திகானே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்புத் திட்டம் மக்கள் பாவனைக்கு நேற்று திறந்து வைக்கப்பட்டது.
கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீரை இன்று பருக முடிந்துள்ளது.
கடற்படையினரின் தொழில்நுட்ப உதவியுடன், இந்த திட்டத்தை நிறைவுசெய்ய குமுதுனி டி சொய்ஸா , காந்தி வெத்தமுனி ஆகியோர் கம்மெத்தவுடன் இணைந்தனர்.