.webp)
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன் 1000 அடியை விட நீளமான ஓவியத்தை வரையும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது.
கல்வி அமைச்சுடன் இணைந்து சிரச தொலைக்காட்சி இந்த திட்டத்தை முன்னெடுக்கின்றது.
ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படும் சிறுவர் தினத்தை முன்னிட்டு, 1000 அடியை விட நீளமான ஓவியம் வரையப்படுகிறது.
அதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் பாடசாலை மாணவர்களும், கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில், இரண்டு சித்திரங்கள் வீதம் பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன் ஒவியம் தீட்டப்படுவதுடன், பின்னர் அந்த அனைத்து சித்திரங்களையும் சேர்த்து ஒரு ஓவியம் வரையப்படும்.
யாழ் மாவட்டத்தில் நாளை இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அதற்காக இன்று உத்தியோகபூர்வ வாகனம் ஒன்று புறப்பட்டுச் சென்றது.