.webp)
Iraq: ஈராக்கில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களுக்கும் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் மாளிகையிலுள்ள நீச்சல் தடாகத்தை பயன்படுத்திய காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் வௌியாகியுள்ளன.
ஈராக்கின் பிரபல அரசியல்வாதியான ஷியாவைச் சேர்ந்த முக்டாடா அல் சாதர் (Moqtada al-Sadr) அரசியலில் இருந்து விடை பெறுவதாக அறிவித்ததையடுத்து, அங்கு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
முக்டாடா அல் சாதரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டு வருவதாக ஈராக்கின் ஆளும் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக ஈராக்கின் பாக்தாத் நகரில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையை ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், ஈராக்கில் உள்ள பாக்தாத் நகரிலும் அதே போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.