பேச்சுவார்த்தையை ஒருங்கிணைக்க ஜப்பான் விருப்பம்

இலங்கையின் கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தையை ஒருங்கிணைக்க ஜப்பான் விருப்பம்

by Staff Writer 30-08-2022 | 9:54 PM

Colombo (News 1st) அனைத்து கடன் வழங்குனர்களும் இலங்கையின் கடன் பிரச்சினை தொடர்பில் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என  ஜப்பானிய நிதியமைச்சர்  Shunichi Suzuki தெரிவித்துள்ளார்.

அனைத்து கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தையை ஒருங்கிணைப்பதற்கு ஜப்பான் விருப்பத்துடன் இருப்பதாக  ஜப்பான் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

கடன் வழங்குநர்களுடனான கலந்துரையாடலை ஒருங்கிணைக்குமாறு, ஜப்பானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் Reuters   செய்திச்சேவைக்கு தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இலங்கையுடன் வேறு பல விடயங்கள்  தொடர்பில் கலந்துரையாடினாலும் கடன் வழங்குவோருடனான கலந்துரையாடல் குறித்து இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என ஜப்பானிய வௌிவிவகார அமைச்சர் Yoshimasa Hayashi தெரிவித்துள்ளார்.